Friday, March 1, 2019

25 ஆண்டுகள் நிறைவு !!!

இன்று செப்டம்பர் 13 , 2018

பலருக்கு இது ஒரு நாள்
வெகு சிலருக்கு இது மகத்தான நாள்
அந்த வெகு சிலரில் நானும் ஒருவன்

சரியாக 25  ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்ட அந்த சிலர்
தங்களின் பணியை மகத்தானஒரு நிறுவனத்தில் தொடங்கிய பொன்னாள் !

இந்த நாள் இல்லையென்றால் வேறொரு நாள்
இந்த நிறுவனம் இல்லையென்றால் வேறொன்று என்று வியாகியாயினம் பேசலாம் -அதை விடுப்போம்

இந்த நாளில் இந்த நிறுவனத்தில் சேர்ந்ததால்
என்னென்ன மாற்றங்கள் நடந்தன
வாழ்வில் எத்தகைய ஏற்றங்கள் நடந்தன என்பதை பற்றி சிந்திப்போம் ...

25 ஆண்டுகளின் நினைவில் மூழ்குகிறேன்
யதார்த்தமாக வேலைக்கான விண்ணப்பத்தை தந்த பெரியப்பாவை நினைக்கிறேன்
சும்மா அப்ளை பண்ணி வை - பார்க்கலாம் என்றார்
சும்மா எழுதி, சும்மா நேர்முகம் செய்து, சும்மா மெடிக்கல் செய்து - Appointment ஆர்டரும் வந்தது...

இளங்கலை மூன்றாம் ஆண்டு ஆரம்பித்த சமயம்...
படிப்பை தொடர்வதா?..வேலைக்கு செல்வதா? ...
படிப்பை முடிக்க முடியுமா? ஒன்றும் தெரியாமல் குழம்பிய சமயம் ...

கல்லூரி துறையிலே நம்ம பேர்ல விவாதம் ...
நன்றாக படிப்பவன் படிக்கலாமே....ஒரு புறம்
படிச்சு என்ன வேலைக்கு தானே போகணும் அது இப்போதே கிடைச்சிருச்சே என்று...மற்றொரு புறம் 

பேருதவி புரிந்தார் H கிருஷ்ணன் அவர்கள்
கல்லூரி படிப்பு முடிவதற்கு தடை இல்லை -
வேலைக்கு சேரும் முன்பு அணைத்து செய்முறை களையும் முடித்து விடலாம்
பிறகு விடுப்பு எடுத்துக்கொண்டு முடிந்த வரை
கல்லூரி பரீட்சைகளையும் முடிக்கலாம்என்று அறிவுரை சொன்னார்

தெம்பு பிறந்தது
செய்முறைகலை முடித்து ரெகார்ட் நோட்டு புத்தகங்களுடன் வேலூர் சென்றடைந்தேன்
13 /09 /1993 அன்று வேலைக்கு சேர ......

வூரிசு கல்லூரி - முதல் நாள் விழாவுடன் தொடங்கியது
240 சொச்சம் பேர் - மூன்று பிரிவுகளாக்க பட்டு - எங்கள் பணி வாழ்வு தொடங்கியது Induction Training உடன்.

சத்தியமாக ஒன்றும் புரியவில்லை அப்போது

80  பேர்கள் ஒரே அறையில் - வருபவர்கள் பேசுவது முதல் 2 வரிசைக்கே கேட்க்கும் - பின்வரிசையில் அமர்ந்து நாங்கள் பேசுவதும், அரட்டை அடிப்பதும் - தேநீர் மற்றும் பிஸ்கட்இடைவெளி எதிர் நோக்கியும்....

வகுப்புகளில் நெறைய abbreviation பிரயோகம் வினோதமாக இருந்தது ...EA Sheet, BRS, SSS போன்றவை ...

நண்பர்கள் விவேகானந்தன் (எங்கப்பா இருக்க?), பாரி, ஹரிகுமார், சுரேஷ் (எங்கப்பாஇருக்க?)
மற்றும் முத்துக்குமரன் (SMK) ஏனையோரிடம் செலவழித்த இரண்டு வாரம் -மறக்க இயலாதது...

25 Sep 1993 அன்று வரிசையாக அமர வைத்து ஒதுக்கப்பட்ட கிளையில் சேர்வதற்கானஆணை தரப்பட்டது
எந்த கிளை என்பதை விட ...நாம் பழகிய நண்பர்கள் எங்கெங்குசெல்கிறார்கள் என்பதிலே மிக்க அக்கறை கொண்டோம் !

27 Sep 1993 அன்று 13 நண்பர்கள் திண்டிவனம் கிளை சேர்ந்தோம்...

2 வருடங்கள் திண்டிவனம் கிளை
பிறகு சொந்த ஊர் புதுவை . . .
அதன் பிறகு பதவி உயர்வில் தில்லை ...
வாழ்க்கை ஒரு வட்டம் போல திண்டிவனம் கிளை
ஓடியது 8.5 வருடங்கள்

விடை பெற்றேன் L.I.C இடமிருந்து 23-03-2002 அன்று

அங்கிருந்து வாழ்க்கை கணினி துறை பக்கம்...
ஓட்டம் - பல சவால்கள் - பல சொகுசுகள் - பல ஊர் சுற்றல்கள் - உள்நாட்டிலும் - அமெரிக்காவிலும் ...
இதோ இப்போது சிட்னி நகரில் இதை தட்டச்சு செயது கொண்டிருக்கும் வரை
பற்பல அனுபவங்கள்...

தொழில் சார்ந்த வளர்ச்சிக்கும் ,
தனிப்பட்ட முறையில் அறிவேற்றத்திற்கும்,
அனுபவ செழுமைக்கும்
எல்.ஐ.சி என்கிற இந்த நிறுவனத்தின் பங்கு / பாதிப்பு
அளப்பரியது...

நமது சேர்க்கை நமது சுய தேர்வானாலும்......
சூழல் நிறுவனம் தந்ததே .....

அப்படிப்பட்ட நல்ல சூழல் -
பல நல்ல இதயங்களாலும்,
நல்ல வளர்ச்சி நோக்கிய மூளைகளாலும் நிரம்பி இருந்தது என் பாக்கியம்...

இன்று வரை .... இன்னும் எத்தனை நாட்கள், வருடங்கள் தெரியாது ....
நான் உழைத்து கொண்டிருப்பது.....ஆயுள் காப்பீட்டு துறையே...
பூகோளங்கள் மாறியிருக்கலாம், துறை மாறியிருக்கலாம்.....
ஆனால் அடிநாதம் ஒன்றே.....
அதன் அரிச்சுவடி எல்.ஐ.சி யில் கற்றது, பழகியது......

அந்த பழக்கம் தொடங்கி......25 முடிந்து ....தொடர்கிறது .....

உடன் பயணித்த தோழமை உள்ளங்களுக்கு
வாழ்த்துகளும், நன்றிகளும்,

சங்கர் பாபு
561608

No comments: