Friday, June 25, 2010

பிடிக்கவில்லை - பிடிக்கும் - பழைய ஏடுகளிலிருந்து ..........

This one was written on 08-07-1997 at 8.55 a.m. This basically portrays a mind which is in a very depressed state and is in two states - not wanting to do anything and what it actually wants !!!

பிடிக்கவில்லை...

எதுவும் செய்யப்பிடிக்கவில்லை
அமைதியாக ஒரு இடத்தில்அமர்ந்து கொண்டு,
உத்தரத்தை உற்றுப்பார்த்துக்கொண்டு
நெஞ்சில் சோக நினைவலைகள் எழும்பிய வண்ணம் சும்மா இருப்பதைத்தவிர
வேறு எதுவும் செய்யப்பிடிக்கவில்லை !
'ஆள் அரவமற்ற ஓர் இடம் வேண்டும்
மயான அமைதியும் உடன் வேண்டும்' - மனம் ஏங்க
இரு கண்ணில் கண்ணீர் மல்கி நிற்க
புதைத்து வைத்த எண்ணங்கள் பொங்கி பெருக
நான் எனக்குள்ளே மூழ்கி மூழ்கி எதையோ தேட
வேறு எதுவும் செய்யப்பிடிக்கவில்லை !!

பிடிக்கும்

பிடிக்கிறது
அருகமர்ந்து சோகத்தை நான் உன்னிடம் செப்ப
அன்போடும் அக்கறையோடும் நீ செவிமடுக்க
வார்த்தைகளின்றி விழிகளும் தடுமாற
கையிரண்டல் கண்ணீரை நீ துடைக்க
எனக்கென்று ஒரு ஜீவன் உண்டென்று
இலேசாகி என்மனம் பறக்கிறது....

சோகமும் பிடிக்கிறது
சுமை குறைக்க நீ இருப்பதால்.............

1 comment:

ANBARASAN said...

Thalaiva .. pirichurukeenga . kanipporiyoda pesum neengal , kavithaiyinalae idayathai padam eduthu potrukeenga !!! Also it reminds my haiqoo 'uvarppana kaneerum inikkirathu , athu unnai ninaithu sottum bothu :-) '