Wednesday, February 17, 2010

சபதமேற்போம் - பழைய ஏடுகளிலிருந்து....

This one is again from archives. In my LIC days we used to have Poetry writing contest on New Year Eve Celebrations. This was a initiative from my end when I was the Secreatary of the Recreation Club in Pondicherry. Since there would be independent judges, I too used to have my share of participation. On one such event, I wrote this on the topic - சபதமேற்போம்:

சபதமேற்போம்
நல்ல சபதமேற்போம்
புதிய ஆண்டு பூக்கும் சமயம் இதிலே
புதியதோர் உலகம் படைக்க
சபதமேற்போம் !

பழமைவாத குப்பைகளை
பகுத்தறிவு அக்னி கொண்டு
பங்காக அழிக்க நாம் சபதமேற்போம் !

பாட்டிலும் ஏட்டிலும்
புனைந்து பாராட்டி
பெண்ணை - நாட்டிலும் வீட்டிலும்
பொது அடிமைகளாக்கும் போக்கினை
ஒழிக்க - நாம் சபதமேற்போம் !

சீர் கெடும்
சுற்றுசூழலை - பாதுகாக்க
சுத்திகரிக்க முனைய
சீரிய ஒரு சபதமேற்போம் !

மண்ணில் சாதி உண்டே - அது
மனித சாதி என்ற ஒன்றே -
மனதளவில் அம்மாற்றம் வர ஒரு
மட்டற்ற சபதமேற்போம் !

ஏற்கவோ பல பல சபதங்கள்
முடிக்கவோ பல பல காரியங்கள்

வெற்று சபதங்களோடு
வாய்ச்சொல் வீரர்களாய் இல்லாமல்
செயல் சூரர்களாய் இவ்வாண்டு மாறிட
சிறந்த ஒரு சபதமேற்போம் !!!

===================================================

No comments: