Wednesday, February 17, 2010

லட்சியம் - பழைய ஏடுகளிலிருந்து....

This one is still old - around 1991 in my college days - so pardon the immaturity ;-)

லட்சியம் ஒன்றை நீ கொள்ளணும் - வாழ்க்கையில கொள்ளணும்
அலட்சியமா வாழ்வதை ஒதுக்கணும் - நீ ஒதுக்கணும்

குறிக்கோள் உள்ள மனிதன் அடைவான் வெற்றி
பிறகு உலகமே செல்லும் அவனை பின்பற்றி

ஏன் பிறந்தோம் என யார்க்கும் தெரியாது - ஆனால் நீ
ஏன் வாழ்ந்தாய் என கேள்விகள் கூடாது

கல்வி வேலை குடும்பம்
என முடிந்து விடுவதா உன் வட்டம்?

உலகே ஒரு நாடக மேடை
அதில் உன் பங்கை
சிறப்பாக நிறைவேற்று
உலகே வர வேண்டும் உன் சொல் கேட்டு

எத்தனை மனிதர் பிறந்தார்
அதில் எவர் சாதனை பல புரிந்தார்
சாதனையாலனுள் நீ ஒருவனாக
வாழ்த்துகள் என்னுடைய நண்பனாக !
===========================================

No comments: