வெற்றி !!!
சாதாரணமாக கிடைத்ததா இந்த வெற்றி?
பல போராட்டங்களுக்குப்பிறகன்றோ கிடைத்தது இது?
பின்னுக்கு இருந்தவன்
முன்னேறி வந்த வழியில்
பட்ட இடர்தான் என்ன
பாடுகள் பல பட்ட போதிலும்
வெற்றிக்கனியின்
சுவையினிலே அவை மறைந்ததென்ன?
ஆரூடங்கள் பல
எதிர் சொன்ன போதிலும்
வீறு கொண்டு உழைத்தால்
கிடைக்காதா வெற்றி?
மடி கொண்டு இருந்தால் கிடைத்திருக்குமா இந்த வெற்றி?
வெறி கொண்டு உழைத்ததாலேயே கிடைத்தது இந்த வெற்றி !
கிடைத்தது போதும்
என்று சோம்பித் திரியாதே மனிதா
போராடு
முதலில் தோற்பாய்
பின் வாங்காதே
போராடு
முழு மூச்சோடு போராடு
வெற்றி பெறுவாய்
போராடாமலே தன்னிறைவோடு வாழாதே மனிதா !
போராடி தேவையை வென்று பார் மனிதா
வாழ்க்கையின் அர்த்தம் அப்போது தெரியும் !
போராடி வெற்றி அடையும் மனிதனுக்கே
அந்த வெற்றியை அனுபவிக்கும் இன்பம் சொந்தம் !!!
போராடு !
இவ்வுலகில்
தகுதியுடையவனே
தாக்குப்பிடிப்பான்
தான் தோன்றி தனமாயிராதே
நீ முதலிடத்தை
தக்க வைத்துக்கொள்ளப்போவது எப்போது?
இது போர்க்களம் - எதிர் நீச்சல் போட்டாலன்றி
கழுத்தினை காப்பாற்றிக்கொள்ள இயலாது !
வென்று வருபவர்களுக்கே
மலர்க்கிரீடம்
போராடாத ஆத்மாக்களுக்கு
இங்கு வேலையில்லை !
போராடி வரும் மனிதன் அடைவான் வெற்றி
பிறகு உலகம் செல்லுமே அவனை பின்பற்றி !!
---------------------------------------------------------------------
There is no substitute for hard work !!!
---------------------------------------------------------------------
Monday, February 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment