கருப்பு சட்டையில்
அழகிய ஓட்டை
அட - நிலா !
------------------------
அந்தி வானத்தில்
ஆரஞ்சுப் பந்து
அஸ்தமிக்கும் ஆதவன் !
--------------------------------
போர்வையின் ஓட்டைகள்
இரவில் தான் தெரிகின்றன
வானமும் என் சாதி !
-------------------------------
செவிக்கு உணவளித்துக் கொண்டே இருங்கள்
வயிற்றுக்குத்தான் முடியவில்லையே !
-------------------------------
உணவளியுங்கள்
ஜகத்தினை அழிக்கவாவது
-------------------------------------
ஐந்தண்டுக்கொரு முறை ஏன்
தினசரி வரக்கூடாதா தேர்தல் ?
------------------------------
நாடு நசிகிறது
நலிவிலா நாடாள்பவர்கள்
நவீன நீரோக்கள் !
-----------------------------
தி. சங்கர் பாபு
Monday, February 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
சொல்வாள் தீட்டி கவிப்பேரரசர்களுடன் கணை புரியவேண்டிய கரங்கள் இன்று கணிபொறி துறையில் கட்டுண்டு கிடக்கின்றது...
Post a Comment